/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விழிப்புணர்வு
/
வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்து விழிப்புணர்வு
ADDED : பிப் 08, 2024 05:11 AM
கம்பம், :அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 23 கிராமங்களில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
வேளாண் துறை சார்பில் ஒவ்வொரு வட்டாரத்திலும் சில கிராமங்கள் தேர்வு செய்து, அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
வேளாண், தோட்டக்கலை, பொறியியல், கால்நடை, மீன் வளம் உள்ளிட்ட துறைகள் தங்கள் துறைகளில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவார்கள். கடந்த நிதியாண்டில் இத் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. தற்போது திட்டம் பற்றிய விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்த பிப் 7ல் முகாம் 23 ஊர்களில் முகாம்கள் நடத்தப்பட்டது. அடுத்து வரும் 28 ல் முகாம் நடத்த உள்ளனர்.
சின்னமனூரில் பொட்டிப்புரம், எரசை, கன்னிசேர்வைபட்டி கிராமங்களில் நேற்று நடந்தது. விவசாயிகள் பங்கேற்றனர்.
பொட்டிபுரத்தில் வேளாண் துணை இயக்குநர்கள் சாந்தி (உழவர் பயிற்சி நிலையம், சரவணன் (வேளாண் வணிகம்), உதவி இயக்குநர் பாண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

