/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
பாரம்பரிய நெல் சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : செப் 25, 2024 05:03 AM
கம்பம், : கம்பத்தில் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளை அழைத்து சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இயற்கை வேளாண்மை, பாரம்பரிய பயிர் ரகங்களை மீண்டும் சாகுபடி செய்ய தமிழக அரசு கொள்கை முடிவாக அறிவித்துள்ளது. இயற்கை வேளாண்மை , பாரம்பரிய பயிர் ரகங்களை சாகுபடி செய்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மிக கணிசமான விவசாயிகளே பின்பற்றுகின்றனர். விவசாயிகளுக்கு போதிய விழிப்புணர்வு இன்றி இயற்கை வேளாண்மைக்கு திரும்ப மறுக்கின்றனர்.
பாரம்பரிய ரகங்களான தூயமல்லி, இரத்தசாலி, மைசூர் மல்லி உள்ளிட்ட பல பாரம்பரிய ரகங்கள் கம்பம் பாலகுருநாதன் தனது வயலில் சாகுபடி செய்துள்ளார். விவசாயிகளுக்கு இந்த வயலை காண்பித்து அவர்களை பாரம்பரிய ரகங்களை சாகுபடி செய்ய ஊக்குவிக்க சின்னமனூர்' அட்மா' திட்ட தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ரேவதி சின்னமனூர் வட்டாரத்தை சேர்ந்த 50 விவசாயிகளை அழைத்து காண்பித்தார். விவசாயிகளுக்கு பஞ்சகாவியா, ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், சாணிப்பால் கரைசல், 3 G கரைசல் ( இஞ்சி, பச்சை மிளகாய் , பூண்டு )
தயாரிப்பு மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விளக்கப்பட்டது. விவசாயி பாலகுருநாதன் சாகுபடி முறைகள், மகசூல் பற்றி விளக்கினார். ஏற்பாடுகளை தொழில்நுட்ப மேலாளர் ரேவதி, உதவி மேலாளர்கள் விஜயகுமார், அஜித் ஆகியோர் செய்திருந்தனர்.