UPDATED : அக் 15, 2026 04:57 PM
ADDED : அக் 15, 2026 04:54 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி கே.வி., பள்ளியில் காரைக்குடி சேதுபாஸ்கரா வேளாண் கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பள்ளி முதல்வர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். நிகழ்வில் தனிநபர் சுகாதாரம், சுற்றுப்புற துாய்மையின் அவசியம்,அலைபேசியை பயன்படுத்துவதை குறைத்தல், போக்குவரத்து விதிமுறைகளை மதித்தல், சாலை பாதுகாப்பு முக்கியத்துவம் உள்ளிட்டவை பற்றி விளக்கினர். வேளாண் மாணவிகள் லத்திகா, தீபலெட்சுமி, பிரியதர்ஷினி, ஷர்மிளா, வானதி, ருத்தர்ஷினி, கவிபாரதி, ஆசிரியைகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
