/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சுருளி அருவியில் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
/
சுருளி அருவியில் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு
ADDED : அக் 13, 2024 05:29 AM
தேனி: சுருளி அருவியில் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்டத்தில் என்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் பல்வேறு கிராமங்களில் போதைப்பொருட்கள் , பிளாக்ஸ்டிக் ஒழிப்பு, நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக 10க்கும் மேற்பட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்கள் சார்பில் சுருளிபட்டியில் முகாம் நடத்தப்பட்டது. சுருளி அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் 500 பேருக்கு என்.எஸ்.எஸ்., சார்பில் மஞ்சப்பை வழங்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியை மாவட்ட என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் நேருராஜன் ஒருங்கிணைத்தார். அரசு உதவி பெறும் பள்ளிகள் கூட்டமைப்பு நிர்வாகி பிரபாகர், வனத்துறை ரேஞ்சர் பிச்சைமணி, ஜெய்கணேஷ், திட்ட அலுவலர்கள் மணிநாகா, மூர்த்தி, பேச்சியம்மாள் பங்கேற்றனர்.