/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனத்தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்
/
வனத்தீ தடுப்பு பற்றிய விழிப்புணர்வு முகாம்
ADDED : டிச 20, 2024 03:32 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, வனத்துறை சார்பில் திம்மரசநாயக்கனூரில் வனப்பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஆண்டிபட்டி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் முத்துக்குமார் தலைமை வகித்தார்.
வனச்சரகர் அருள்குமார் முன்னிலை வகித்தார். வனம் ஒட்டிய பகுதியில் புகைபிடித்தல், எளிதில் தீப்பற்றும் பொருட்களை அப்படியே விட்டுச்செல்வது ஆகியவற்றை பொதுமக்கள் தவிர்க்க முகாமில் வலியுறுத்தப்பட்டது.
மழைவெள்ளம், நீர்நிலைகளில் மாணவர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டிய அவசியம், தற்காப்பு முறைகள், தீ விபத்து, நீர்நிலை ஆபத்துக்களில் சிக்கியவர்களை மீட்பது குறித்து விளக்கப்பட்டது. வனவிலங்குகள், பாம்புகள் நடமாட்டம் அவற்றிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.
வனப்பகுதியில் ஏற்படும் தீவிபத்து குறித்து வனத்துறையினருக்கு உடன் தகவல் தரவும், வனப்பகுதியில் தீ பரவாமல் தடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் திம்மரசநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.