/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
புலிகளை பாதுகாக்க வேண்டும் விழிப்புணர்வு சினிமா வெளியீடு தேனியில் டிச. 28 ல் ஒளிபரப்ப ஏற்பாடு

ADDED : டிச 26, 2024 05:35 AM

தேனி: 'புலிகள் ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்.' என்பதை வலியுறுத்தி இயக்குனர் சேகர் தத்தாத்ரியின் விழிப்புணர்வு சினிமா டிச.28 மாலை 4:30 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஒளிபரப்பப்பட உள்ளது.
தேனி கலெக்டர் ஷஜீவனா கூறியதாவது: காலநிலை மாற்றத்தால் தற்போது மழை, வெயில் மாறி,மாறி அதிகளவில் இயற்கை பேரிடர் ஏற்படுகிறது. இதனை சீரமைக்க நமக்கு வனத்தின் பரப்பளவு அதிகரிக்க வேண்டும். அதற்கு உணவு சங்கிலியில் முதன்மை வன விலங்காக உள்ள புலிகள் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். அப்போதுதான் நாம் நிலையான வளமான வனத்தையும், அதன் மூலம் நீரையும் பெற முடியும். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இந்த சினிமா ஒளிபரப்புவதற்கான நோக்கம்.
இதற்கான இலவச டிக்கெட் தேனி கலெக்டர் அலுவலகம், தேனி தனுஷ்க் ஜூவல்லரி ேஷாரூம், நலம் மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. பொது மக்கள், தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், வனவிலங்கு ஆர்வலர்கள் இலவச டிக்கெட் பெற்று திரைப்படத்தை கண்டு களித்து பயன்பெறலாம் என்றார்.