ADDED : பிப் 03, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி அரசு ஐ.டி.ஐ., வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மதுரை ரோட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் ரோடு இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கிவைத்தார்.
நிகழ்வில் ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன், உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஊர்வலம் மதுரைரோடு, புது பஸ் ஸ்டாண்ட், பெருந்திட்ட வளாகம், கலெக்டர் அலுவலகம் வழியாக மீண்டும் ஐ.டி.ஐ., வளாகத்தில் நிறைவடைந்தது. ஐ.டி.ஐ., விளையாட்டு அலுவலர் மருதுபாண்டியன் ஒருங்கிணைத்தார். ஊர்வலத்தில் சாலைப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

