/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பாலியல் வன்கொடுமை, சிறார் திருமண தடுப்பு விழிப்புணர்வு
/
பாலியல் வன்கொடுமை, சிறார் திருமண தடுப்பு விழிப்புணர்வு
பாலியல் வன்கொடுமை, சிறார் திருமண தடுப்பு விழிப்புணர்வு
பாலியல் வன்கொடுமை, சிறார் திருமண தடுப்பு விழிப்புணர்வு
ADDED : நவ 18, 2025 04:38 AM
ஆண்டிபட்டி: பாலியல் ரீதியான வன்கொடுமை, சிறார் திருமணத் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
நவம்பர் 14 குழந்தைகள் தினம், நவம்பர் 20 குழந்தைகள் உரிமை தினத்தை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தை ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் காயத்ரி துவக்கி வைத்தார்.
திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் தனுஷ்கா, மணிகண்டன் ஆகியோர் தலைமை வகித்தனர். சிறுவர் சுரேந்தர், சிறுமி ஹேமமாலினி, சிறுவர் தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுமி நவீனா வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக ஆரோக்கிய அகம் இயக்குனர் முனைவர் சாபு சைமன், துணை இயக்குனர் முருகேசன், தலைவர் தமிழன்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
தேன் சுடர் பெண்கள் இயக்கப் பொருளாளர் பாண்டீஸ்வரி, ஆலோசகர்கள் கருத்தம்மாள், லட்சுமி, தன்னம்பிக்கை குழந்தைகள் இயக்க ஆலோசகர் சுபலட்சுமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வனத்துறை அலுவலர் கனிவர்மன் குழந்தைகளுக்கு மரக் கன்றுகள் வழங்கினார்.
கிராம அளவில் குழந்தைகளுக்கான கட்டுரை, கவிதை, ஓவியம், பேச்சுப் போட்டிகள் நடந்தது. சிறந்த இடம் பிடித்த சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறுமி நவீனா நன்றி கூறினார்.

