/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜன 05, 2024 04:58 AM
தேனி : தேசிய பசுமைப்படை, மாநில அரசின் சுற்றுச்சூழல் துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை இணைந்து தேனி கம்மவார் சங்க கல்வியியல் கல்லுாரியில் பள்ளி மாணவர்களுக்கு நிலையான வாழ்வியல் முறை பணி என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. சி.இ.ஓ., இந்திராணி தலைமை வகித்தார்.
மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை, விதைப்பந்து தயாரித்தல், நீர் தரபகுப்பாய்வு உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி வழங்கப்பட்டது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கண்ணன் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ராமசந்திரன், சுற்றுச்சூழல்துறை அலுவலர் முத்துக்குமார், உதவிப்பொறியாளர் காவியா, பெரியகுளம் வனச்சரகர் ஆதிரை உள்ளிட்டோர் பேசினர்.
பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெங்டேசன் நன்றி கூறினார்.