ADDED : டிச 25, 2024 07:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில், ஆட்சி மொழிச் சட்ட வார விழா, உணவுப் பொருள் வழங்கல் துறையின் சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் ஷஜீவனா பங்களாமேடுஅருகே துவக்கி வைத்தார். ஊர்வலம் நேரு சிலை வழியாக பெரியகுளம் ரோடு சந்தைப்பேட்டை வரை சென்று ஊர்வலம் துவங்கிய இடத்தில் முடிந்தது. வணிக நிறுவனங்கள் தமிழ் மொழியில் பெயர் பலகை வைப்பது குறித்து பள்ளிக் கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்வில் டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி, உதவியாளர் அர்ஜூனன், அரசு அலுவலர்கள், தமிழ் ஆர்வலர்கள், பங்கேற்றனர்.