ADDED : நவ 11, 2025 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உத்தமபாளையம் தாலுகா, எரசக்கநாயக்கனுாரில் உலக அமைதியை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கிராம கிளை நுாலகத்தில் துவங்கி ஊர்வலம் பஸ் ஸ்டாப் அருகே நிறைவடைந்தது.
ஊராட்சி செயலாளர் பன்னீர்செல்வம் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலத்தில் கிராம பிரமுகர் ரங்கசாமி, ஓய்வு வேளாண் இணை இயக்குனர் நாட்ராயன்,பள்ளி மாணவர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

