ADDED : செப் 20, 2026 03:54 PM
அ நிறம் | அளவு
உத்தமபாளையம், செப் 21-–
உத்தமபாளையம் ரோட்டரி கிளப் சார்பில் போதை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பைபாஸ் ரோட்டில் துவங்கிய ஊர்வலத்தை எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா துவக்கி வைத்தார். பள்ளி மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்தவாறு ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் போதைக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். கிராமச் சாவடி, மெயின் பஜார் , தேரடி வழியாக பஸ் ஸ்டாண்டில் ஊர்வலம் நிறைவடைந்தது. ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர்.
