/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
/
விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
ADDED : டிச 30, 2025 05:53 AM
போடி: சிலமலையில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் சார்பில் வேளாண் அமைச்சகம் கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தின் கீழ் கிசான் கால் சென்டர் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. சிலமலை, சூலப்புரம் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி நான்காம் ஆண்டு மாணவர்கள் அஜய் குமார், ஆசய் பிரகாஷ், அக்சித் மீனா, சுன்னாராம், தனுஷ், தினேஷ், ஈஸ்வர் உள்ளிட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கிசான் கால் சென்டர் மூலம் விவசாயிகள் தொடர்பு கொண்டு பயிர்களில் ஏற்படும் நோய் பூச்சி தாக்குதல், பூச்சி கொல்லி பயன்பாடு, மண் மேலாண்மை, சாகுபடி முறைகள், வானிலை நிலவரம், அரசு மானியம், திட்டங்கள் குறித்த சந்தேகங்களை வேளாண் அதிகாரிகளிடம் ஆலோசனை பெறுவது குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் எடுத்து கூறினர்.

