/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உணவு வழங்கும் திட்டம் சோதனை முறையில் அமல்
/
உணவு வழங்கும் திட்டம் சோதனை முறையில் அமல்
ADDED : டிச 30, 2025 05:53 AM
தேனி: நகராட்சி துாய்மைப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் சோதனை முறையில் நேற்று செயல்படுத்தப்பட்டது.
சென்னையில் துாய்மைப்பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் கடந்த மாதம் துவக்கி வைத்தார். தொடர்ந்து மற்ற நகராட்சி, மாநகராட்சிகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி தேனி நகராட்சியில் பணிபுரியும் 309 பணியாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு வேளை உணவு வழங்க ரூ.1.77 கோடி ஒதுக்கீடு செய்யகடந்த நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சோதனை முறை அமல்: ஒரு வேளை உணவு வழங்கும் திட்டம் நேற்று காலை சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டது. தேனி நகராட்சியில் 150 துாய்மை பணியாளர்களுக்கு டிபன் பாக்சில் தலா 6 இட்லி, ஒரு வடை, சாம்பார் வழங்கப்பட்டது. பெரியகுளம் நகராட்சியில் 43 பேருக்கும், கம்பத்தில் 47 பேருக்கும், சின்னமனுாரில் 112 பேருக்கும் நேற்று காலை உணவு வழங்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ரவா கிச்சடி, வெண்பொங்கல், ரவா உப்புமா, ரவா பொங்கல், சேமியா கிச்சடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நகர்பகுதியில் 7 இடங்களில் உணவுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

