/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீர்நிலைகள் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
/
நீர்நிலைகள் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
நீர்நிலைகள் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
நீர்நிலைகள் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ADDED : டிச 15, 2025 06:10 AM
தேனி: ''மாவட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி மாணவர்கள் உயிரிழப்பதை தடுக்க பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.'' என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் ஆண்டு தோறும் 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆறு, கிணறு, நீர்தேங்கி உள்ள பழைய கல்குவாரிகளில் மூழ்கி உயிரிழப்பது தொடர்கிறது.
பெரும்பாலும் விளையாட செல்கிறேன் எனக் கூறி செல்லும் மாணவர்கள், நண்பர்களுடன் நீர்நிலைகளில் விளையாடும் போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக முல்லைப் பெரியாற்றில் சில மாதங்களுக்கு நீர் வரத்து தொடர்ந்து காணப்படுகிறது.
இவ்வாறான நேரத்தில் வீரபாண்டி, உத்தமபாளையம், தேனி ஆகிய இடங்களில் விளையாட்டாக இறங்கி நீரின் வேகத்தில் இழுத்து செல்லப்பட்டு கல்லுாரி, பள்ளி மாணவர்கள் உயிரிழக் கின்றனர்.
மாணவர்கள் உயிரிழப்பதை தடுக்க பள்ளிகள், கல்லுாரிகளில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித் துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் கோடை காலத்தில் மாவட்ட விளையாட்டு அரங்கில் அடிப்படை நீச்சல் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

