/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடியில் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம்
/
போடியில் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் ஊர்வலம்
ADDED : ஜூலை 07, 2025 02:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி : போடி நகராட்சி, சிசம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, தமிழ் ரோலர் ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் போதைப் பொருள், பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு ரோலர் ஸ்கேட்டிங் ஊர்வலம் நடந்தது.
நகராட்சி கமிஷனர் பார்கவி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் கண்ணன், பள்ளி தாளாளர் வேதா, முதல்வர் சதீஷ், ஸ்போர்ட்ஸ் அகாடமி பெற்றோர் சங்க தலைவர் சோனை முத்து முன்னிலை வகித்தனர். அகடாமி மாஸ்டர் மணிகண்டன் வரவேற்றார். எஸ்.ஐ., கிருஷ்ணவேணி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். மாணவர்களின் ஸ்கேட்டிங் ஊர்வலம் நகராட்சியில் துவங்கி கட்டபொம்மன் சிலை, காமராஜர் பஜார், தேவாரம் மெயின் ரோடு, பனோரமா நகர் வழியாக பள்ளி வரை சென்றனர்.