/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனையில் உபயதாரர் மூலம் நிழற்கூரை
/
அரசு மருத்துவமனையில் உபயதாரர் மூலம் நிழற்கூரை
ADDED : டிச 28, 2024 06:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் புற நோயாளிகள் பிரிவு கட்டடம் எதிரே நோயாளிகள் அமர்வதற்கு வசதியாக உபயதாரர் மூலம் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் 600க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் ஆண்டிபட்டி மற்றும் கிராமங்களில் இருந்து வருகின்றனர். 30 படுக்கை வசதிகளுடன் வார்டுகள் உள்ளன.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களில் இரவில் அடையும் பறவைகள் இடும் எச்சம் அப்பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து உபயதாரர் மூலம் புற நோயாளிகள் பிரிவு கட்டடத்தின் எதிரில் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

