/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐயப்பன் கோயில் மார்கழி உற்ஸவ கொடி ஏற்றும் விழா
/
ஐயப்பன் கோயில் மார்கழி உற்ஸவ கொடி ஏற்றும் விழா
ADDED : டிச 22, 2025 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி நன்மை தருவார்கள் கோயில் வளாகத்தில் ஐயப்பன் சுவாமி, 49 அடி உயர மாகாளியம்மன் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் டிசம்பர் 27ல் துவங்கும் மார்கழி உற்ஸவ விழாவினை முன்னிட்டு கொடி ஏற்றும் விழா நடந்தது.
கோயில் அறங்காவலர் செல்வம் தலைமையில் கொடி மரத்திற்கு அலங்காரம், பூஜைகள் செய்து கொடி ஏற்றப்பட்டது. ஐயப்பன் சுவாமி, மாகாளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயில் பொருளாளர் சீனியப்பன், பா.ஜ., ஆண்டிபட்டி நகர் தலைவர் மனோஜ் குமார், கோயில் நிர்வாகிகள் சுரேஷ், கண்ணன், சவுந்தரபாண்டியன், கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.

