ADDED : டிச 28, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அல்லிநகரம் காளியம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில், 24ம் ஆண்டு ஐயப்பன் மண்டல பூஜை, மற்றும் குத்துவிளக்கு பூஜை நடந்தது.
குருசாமி முருகேசன் தலைமையில் பக்தர்கள் கோயிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்திருந்தனர்.
மண்டல பூஜையில் குருசாமி சுப்பையா, முருகன் கோயில் குருசாமிகள், முருகன் பிரவீன்குமார் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் வேலுச்சாமி, மாரிச்சாமி, வினோத்குமார் ஆகியோர் மண்டல பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர்.