/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல்: நாய்கள் குதறியது
/
ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல்: நாய்கள் குதறியது
ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல்: நாய்கள் குதறியது
ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடல்: நாய்கள் குதறியது
ADDED : மார் 28, 2025 05:48 AM
மூணாறு; இடுக்கி மாவட்டம் ராஜகுமாரி அருகே கஜனாபாறை அரமனபாறை பகுதியில் ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட சிசுவின் உடலை நாய்கள் கடித்து குதறிய அவலம் நடந்துள்ளது.
அப்பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க நேற்று காலை தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் ஏலத்தோட்டத்தில் பிறந்து சில நாட்கள் ஆன சிசுவின் உடல் உறுப்புகள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைத்தனர்.
அவர்கள் ராஜாக்காடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் சிசுவின் உடல் உறுப்புகளை சேகரித்து பிரேத பரிசோதனைக்கு இடுக்கி மருத்துவ கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அதே பகுதியில் தனியார் ஏலத்தோட்டத்தில் வேலை செய்யும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு குறை மாதத்தில் பிறந்த குழந்தை இறந்தது. அதனை ஏலத்தோட்டத்தில் புதைத்த நிலையில் நாய்கள் கடித்து குதறியதாக விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட தம்பதியினரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.