/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராஜாகுளத்தில் தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம்; சுகாதாரம் பாதிப்பு தேனி நகராட்சி 32 வது வார்டு பொது மக்கள் குமுறல்
/
ராஜாகுளத்தில் தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம்; சுகாதாரம் பாதிப்பு தேனி நகராட்சி 32 வது வார்டு பொது மக்கள் குமுறல்
ராஜாகுளத்தில் தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம்; சுகாதாரம் பாதிப்பு தேனி நகராட்சி 32 வது வார்டு பொது மக்கள் குமுறல்
ராஜாகுளத்தில் தேங்கிய கழிவுநீரால் துர்நாற்றம்; சுகாதாரம் பாதிப்பு தேனி நகராட்சி 32 வது வார்டு பொது மக்கள் குமுறல்
ADDED : பிப் 07, 2024 12:43 AM

தேனி: தேனி ராஜாக்குளத்தில் தேங்கும் குப்பை கழிவுகளல் ஏற்படும் துர்நாற்றத்தால் வீசி அப் பகுதியினர் சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிக்கின்றனர். ஒரே வாரத்தில் 8 குழந்தைகளுக்கு ஏற்பட்ட மர்ம காய்ச்சலால் பெற்றோர் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் பிடிக்க அரை கி.மீ., துாரமும், ரேஷன் பொருட்கள் வாங்க ஒன்றரை கி.மீ., துாரமும் பயணிக்கும் அவலம் என்பன உள்ளிட்ட பல்வேறு வசதி குறைபாடுகளால் தேனி அல்லிநகரம் நகராட்சி 32வது வார்டு ராஜாக்களம் பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
இப்பகுதியில் உள்ள ராஜாக்குளத்திற்கு அருகில் ராஜாக்களம், கால்நடை உழவர் பயிற்சி மையத்திற்கு பின்புற பகுதியில் 30 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இந்த வார்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த வில்லை என இப்பகுதியில் வசிக்கும் மலையாண்டி, சின்னஈஸ்வரி, ஜோதி, விஜயா ஆகியோர் கூறியதாவது:
குடிநீருக்காக ராஜாககளம் பகுதியில் ஒரு அழ்துளை குழாய் பயன்பாட்டில் உள்ளது. அதில் பழுதான ஏர் வால்வு'வை சீரமைக்க வலியுறுத்தி மனு அளித்தோம். பல மாதங்கள் ஆன நிலையில் இதுவரை சீரமைக்க வில்லை. இதனால் ஆழ்துளை குழாயில் தண்ணீர் அடித்து எடுக்க சிரமமாக உள்ளது. எனவே, தற்போது ஒரு குடிநீர் கேன் ரூ.40 என வாங்கி பயன்படுத்தி வருகிறோம்.
மேலும் குடிநீர் கேன் கிடைக்காத நேரத்தில் மதுரை ரோட்டில் தனியார் பள்ளி அருகே பகிர்மான குழாயில் குடிநீர் பிடித்து, சுமந்து வருகிறோம். இது அரை கிலோ மீட்டர் துாரமாகும். மேலும் ரேஷன் கடையில் பொருள் வாங்க பங்களாமேடு டி.எஸ்.பி., அலுவலகம் அருகே வரை ஒன்றரை கி.மீ., நடந்து சென்று, போக்குவரத்து நிறைந்த பகுதியில் சிரமத்துடன் சென்று பொருட்களை கொண்டு வருகிறோம். அதனால் எங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை, சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும்.
நாசியை துளைக்கும் துர்நாற்றம்
ராஜாக்குளத்தில் நகராட்சியின் பாதாள சாக்கடை முறையாக சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் கலக்கிறது.
இதனால் கசடுகள் சேர்ந்து, குளத்தில் பாசம் பிடித்து துர்நாற்றம் குடியிருப்பு பகுதி முழுவதும் வீசுகிறது. இதுகுறித்து ராஜாக்குளத்தில் கிருமி நாசினி மருந்து கலந்தும், தெளித்தும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வார்டு கவுன்சிலரிடம் தெரிவித்தும் நடவடிக்கையும் இல்லை.
குழந்தைகள், சிறுவர் துர்நாற்றமான காற்றை தொடர்ந்து சுவாசிப்பதால் மர்ம காய்ச்சல் ஏற்படுகிறது. இதனால் ராஜாக்குளத்தில் வரும் துர்நாற்றத்தை எதனால் என கண்டறிந்து துர்நாற்றம் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிகாலை, மாலை நேரங்களில் தெருவில் கூட்டம் கூட்டமாக அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.
இவற்றை கட்டுப்படுத்த வேண்டும். தெரு விளக்குகள் இல்லாததால் குடியிருப்புப் பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகின்றன.
நகராட்சி நிர்வாகம் இப் பகுதியில் அடிப்படை வசதி மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

