/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வரத்து அதிகரிப்பால் பல்லாரி விலை சரிவு கிலோ ரூ.40க்கு விற்பனை
/
வரத்து அதிகரிப்பால் பல்லாரி விலை சரிவு கிலோ ரூ.40க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பால் பல்லாரி விலை சரிவு கிலோ ரூ.40க்கு விற்பனை
வரத்து அதிகரிப்பால் பல்லாரி விலை சரிவு கிலோ ரூ.40க்கு விற்பனை
ADDED : டிச 24, 2024 05:19 AM
தேனி: வீடுகள், ஓட்டல்களில் சமையலுக்கு சின்ன வெங்காயமும், பல்லாரி பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் குறைந்தளவு பல்லாரி சாகுபடி செய்யப்படுகிறது.
வரத்து குறைவால் சில மாதங்களாக பல்லாரி கிலோ ரூ. 90 வரை விற்பனையானது. இம்மாத துவக்கத்தில் தேனி உழவர் சந்தையில் கிலோ ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சில நாட்களாக விலை குறைந்து. நேற்று கிலோ ரூ. 40 முதல் விற்பனையானது. இந்த விலை குறைவு பற்றி வேளாண் வணிகத்துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகத்திற்கு மஹாராஸ்டிரா மாநிலத்தில் இருந்து பல்லாரிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைய துவங்கி உள்ளது. அதே நேரம் மழை, ஈரபதமான சூழல் காரணமாக சின்னவெங்காயம் விலை ரூ.10 வரை உயர்ந்து ரூ.70 வரை விற்பனையாகிறது என்றனர்.