/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பட்டாசு வெடிக்க தடை: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
/
பட்டாசு வெடிக்க தடை: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
பட்டாசு வெடிக்க தடை: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
பட்டாசு வெடிக்க தடை: நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : பிப் 23, 2024 05:41 AM
போடி : போடி நகராட்சி கூட்டம் தலைவர் ராஜராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. பொறியாளர் குணசேகர், மேலாளர் முனிராஜ், சுகாதார அலுவலர் மணிகண்டன் முன்னிலை வகித்தனர் கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
பிரபாகரன் : தெருக்களில் எல்.இ.டி., விளக்கு பொருத்தப்பட்டதில் வெளிச்சம் குறைவாக உள்ளது. மின்கம்பம் அருகே உள்ள மரக் கிளைகளை வெட்ட வேண்டும். பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படாத நிலையில் வரி வசூல் கேட்கின்றனர்.
பொறியாளர் : உரியவர்கள் மனு கொடுத்தால் வரி வசூல் செய்வது தவிர்க்கப்படும்.
மகேஸ்வரன் : பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பூங்காவை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை தேவை.
தாரண்யா : நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பட்டாசு வெடிப்பதையும், இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்லும் போது ரோட்டில் பூக்கள் உதிர்ப்பதை தடை விதிக்க வேண்டும். குலாலர்பாளையத்தில் உள்ள நகராட்சி பூங்காவிற்கு முன்னாள் முதல்வர் ஜெ., பெயரை வைக்க வேண்டும்.
சுகாதார அலுவலர் : பட்டாசு வெடிப்பதை தடை செய்வது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால் நகராட்சி மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.