/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை முதல் கம்பமெட்டு மலை ரோட்டில் கனரக வாகனங்களுக்கு தடை
/
நாளை முதல் கம்பமெட்டு மலை ரோட்டில் கனரக வாகனங்களுக்கு தடை
நாளை முதல் கம்பமெட்டு மலை ரோட்டில் கனரக வாகனங்களுக்கு தடை
நாளை முதல் கம்பமெட்டு மலை ரோட்டில் கனரக வாகனங்களுக்கு தடை
ADDED : பிப் 23, 2024 05:44 AM
கம்பம்: கம்பத்திலிருந்து கேரளாவிற்கு செலலும் கம்பமெட்டு மலைப் பாதையில் நாளை ( பிப் 24 ) முதல் இரண்டு வாரங்களுக்கு கனரக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கம்பத்திலிருந்து கேரள செல்ல குமுளி, கம்பமெட்டு மலைப் பாதைகள் உள்ளது. இதில் கம்பத்திலிருந்து கம்பமெட்டு ரோட்டில் 13 கி.மீ. சென்றால் கேரளா சென்று விடலாம். இந்த ரோட்டில் 20 க்கும் மேற்பட்ட கேர் பின் வளைவுகள் உள்ளது.
இதில் கம்பமெட்டு ரோட்டில் கடைசியாக உள்ள கேர் பின் வளைவில் தண்ணீர் ஊற்று உள்ளது. இதனால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வாகனஙகள் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நேற்று காலை வைக்கோல் லாரி கவிழ்ந்து ஒருவர் பலியானார்.
இந்த ரோட்டில் தண்ணீர் ஊற்று ஏற்படும் இடத்தில் பேவர் பிளாக் பதிக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது இதனால் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு பஸ் லாரி, டிரக் போன்ற கனரக வாகனங்கள் போக்குவரத்திற்கு தடை விதித்தும் கார், டூ வீலர்கள் போன்ற இலகுரக வாகனங்கள் போக்குவரத்திற்கு அனுமதித்தும் நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. -