ADDED : பிப் 03, 2025 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: காந்தல்ராஜ் என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் தம்மனம்பட்டி அருகே உள்ளது. வாழை, தென்னை பயிரிடப்பட்டுள்ளது.
சில நாட்களாக தொடர்ந்து வாழைத்தார்களும், இளநீர் திருட்டு அதிகம் நடந்தது. இது குறித்து கூடலுார் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆட்டோவில் வந்து வாழைத்தார்கள் இளநீர் திருடி சென்றவரை பிடித்தனர். விசாரணையில் தம்மனம்பட்டியைச் சேர்ந்த ராஜா 52, என தெரியவந்தது. இவரை கைது செய்து ஆட்டோ, 15 வாழைத்தார்கள், 100 இளநீர்ஆகியவை கைப்பற்றப்பட்டன.

