/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேவிகுளம் தாலுகாவில் இன்று 'பந்த்'
/
தேவிகுளம் தாலுகாவில் இன்று 'பந்த்'
ADDED : ஜூலை 31, 2025 03:12 AM
மூணாறு : தேவிகுளம் தாலுகாவில் இன்று (ஜூலை 31) 'பந்த்' நடக்க உள்ள நிலையில், மூணாறில் காலை 11:00 மணி வரை கடைகள் அடைக்க வர்த்தக சங்கம் முடிவு செய்தது.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 126 கி.மீ., தூரம் ரூ.1250 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த ரோட்டில் அடிமாலி அருகே வாளாரா முதல் நேரியமங்கலம் வரை 14.5 கி.மீ., தூரம் ரோடு பணிகள் விதிமுறை மீறி நடப்பதாக புகார் எழுந்த நிலையில், அப்பகுதியில் பணிகள் செய்ய கேரள உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.
அதற்கு எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு குழு எனும் அமைப்பு சார்பில் இன்று தேவிகுளம் தாலுகாவில் ' பந்த்' நடக்கிறது.
அதற்கு கேரளா வியாபாரி, விவசாயி ஏகோபன சமிதி எனும் வர்த்தக சங்கம் ஆதரவு இல்லை என முக்கியஸ்தர்கள் தெரிவித்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆதரவு தெரிவித்ததால் கடைகளை அடைப்பது தொடர்பாக வர்த்தகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் மூணாறில் காலை 11:00 மணி வரை மட்டும் கடைகளை அடைக்க வர்த்தக சங்கம் முடிவு செய்தது.