/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
வங்கி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 31, 2025 05:44 AM

தேனி: வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பின் சார்பில், ஆர்.பி.ஐ.,வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும். கடன் பெறும் வங்கி ஊழியர்களுக்காக பிடித்தம் செய்யும் 2 சதவீத வட்டித்தொகையை அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று
மாலை அல்லிநகரம் கனரா வங்கி முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைவர் ஜெயகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எஸ்.பி.ஐ., வங்கி அலுவலர்கள் கூட்டமைப்பின் மண்டலச் செயலாளர் சேதுராமன் விளக்கினார். மாவட்ட செயலாளர் லட்சுமணன் வரவேற்றார். ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க செயலாளர் சுப்பிரமணியன், கனரா வங்கி அதிகாரிகள் சங்க செயலாளர் மகாலட்சுமி, இணைச் செயலாளர் மகேந்திரன், தேனி மாவட்ட வங்கி ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் பிரபு ஆகியோர் பேசினார். வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

