ADDED : டிச 31, 2025 05:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலக வளாகத்தில் வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் சார்பில் வி.ஏ.ஓ.,க்கள் அலுவலகத்தை நவீனமயமாக்க வேண்டும், கல்வி தகுதியை பட்டப்படிப்பாக மாற்ற வேண்டும், பதவி உயர்விற்கான கால வரம்பை 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க
வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. தலைவர் பிரபு தலைமை வகித்தார். மாநில ஆலோசகர் ராமர் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ராஜ்குமார், குமரேசன், மதுக்கண்ணன், மகேந்திரன், விஜயமுருகன், மகேஸ்வரி உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

