/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விரிவாக்கப் பகுதியில் அடிப்படை வசதிகள் 'ஆப்சென்ட்' கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா
/
விரிவாக்கப் பகுதியில் அடிப்படை வசதிகள் 'ஆப்சென்ட்' கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா
விரிவாக்கப் பகுதியில் அடிப்படை வசதிகள் 'ஆப்சென்ட்' கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா
விரிவாக்கப் பகுதியில் அடிப்படை வசதிகள் 'ஆப்சென்ட்' கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா
ADDED : அக் 07, 2024 07:15 AM
உத்தமபாளையம்: உத்தமபாளையம் பேரூராட்சியில் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.
இப்பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 18 வார்டுகளை கொண்ட இங்கு மக்கள் தொகை 50 ஆயிரம். ரோடு வசதி, சாக்கடை, கழிப்பறை, தெருவிளக்கு என அடிப்படை வசதிகளில் குறைபாடுகள் உள்ளன.
குறிப்பாக விரிவாக்கப் பகுதிகளான பி.டி.ஆர்., காலனி, தென்றல் நகர், இந்திரா காலனி, மின்நகர், தாமஸ் காலனி, பென்னிகுவிக் நகர், அப்துல் கலாம் நகர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட விரிவாக்கப் பகுதிகளில் ரோடுகள் சரிவர அமைக்கவில்லை.
ஒரு பகுதியில் தார் ரோடு அமைத்தும், மறு பகுதியில் மண் ரோடாகவும் உள்ளது. மழை பெய்தால் நடக்க முடியாத நிலை நீடித்து வருகிறது.
சாக்கடை கட்டாததால் கழிவு நீரை வீடுகளுக்கு அருகில் குழிதோண்டி இறக்கி வருகின்றனர். தெரு விளக்குகள் பராமரிப்பில் குளறுபடி நீடிக்கிறது.
நகரின் தேரோட்ட வீதிகளான வடக்கு, கிழக்கு, மேற்கு ரத விதிகளிலும், மெயின் பஜார் வீதியிலும் இருள் சூழ்ந்துள்ள நிலையில் நம்மை கற்காலத்திற்கு அழைத்து செல்கின்றன.
நகரின் மேற்கு, கிழக்கு பகுதிகளுக்கு தினமும் குடிநீர் வினியோகம், நடுவில் உள்ள பகுதிகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை சப்ளை என்பது நடைமுறையாக உள்ளது.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஆய்விற்கு வருவதே இல்லை. பேரூராட்சிகளில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலையில் உள்ளார். கலெக்டர் ஷஜீவனா திடீர் 'விசிட்' செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

