/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தலைவரை முற்றுகையிட்டு போராட்டம் பெரியகுளம் நகராட்சியில்
/
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தலைவரை முற்றுகையிட்டு போராட்டம் பெரியகுளம் நகராட்சியில்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தலைவரை முற்றுகையிட்டு போராட்டம் பெரியகுளம் நகராட்சியில்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தலைவரை முற்றுகையிட்டு போராட்டம் பெரியகுளம் நகராட்சியில்
ADDED : டிச 31, 2024 06:39 AM

பெரியகுளம்: பெரியகுளத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி நகராட்சி தலைவர் சுமிதாவை முற்றுகையிட்டு அ.ம.மு.க., கவுன்சிலர்கள் ஆர்ப்பாடம் நடத்தியதால்
பெரியகுளம் நகராட்சி கூட்டம் தலைவர் சுமிதா (தி.மு.க.,) தலைமையில் நடந்தது. கமிஷனர் தமிஹா சுல்தானா, பொறியாளர் ராஜேஷ், சுகாதார ஆய்வாளர் அசன் முகமது முன்னிலை வகித்தனர்.
கவுன்சிலர்கள் பேசியதாவது:
மணி வெங்கடேஷ் (அ.ம.மு.க.,): 20 வது வார்டு மில்லர் ரோடு தென்கரை, வடகரை
பகுதியை இணைக்கும் பகுதியாகும். கோயில்கள் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள், இந்த ரோட்டின் வழியாக பள்ளிக்கு செல்கின்றனர். ரோட்டில் சாக்கடை தேங்கி தூய்மை இல்லாமல் உள்ளது.
குறுகிய தெருவில் மீன் கடைகள் அமைத்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது என்றார். இதே கருத்தை ஆமோதித்து அ.ம.மு.க., கவுன்சிலர்கள் பால்பாண்டி, ராஜேஸ்வரி ஆகியோர் நகராட்சி தலைவர் சுமிதாவை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சாக்கடை கழிவுகளை தூய்மைப்படுத்தும் வரை கூட்டம் நடத்தக்கூடாது. இதனால் கூட்டம் 45 நிமிடம் நடக்கவில்லை.
தலைவர்: உடனடியாக சுத்தம் செய்ய சுகாதார ஆய்வாளரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கூட்டம் துவங்கியது. குமரன்: (பா.ம.க.,): 23 வது வார்டில் 20 நாட்களாக தெரு விளக்கு எரியவில்லை.
'விடியல் கிடைப்பது எப்போது' என போர்டை தூக்கி நகராட்சி கூட்டத்தில் காண்பித்தார்.
வார்டில் வசதி செய்து தராததால் ராஜினாமா
கிஷோர்பானு (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): 16 வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் தெருக்களுக்குள் செல்ல முடியவில்லை.
இதனால் கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். நாய் தொல்லை அதிகம் உள்ளது. 4நாட்களுக்கு முன் கல்லூரி மாணவர் நாய் குறுக்கே சென்றதால் டூவீலரிலிருந்து விழுந்து பலியானார்.
சுகாதார ஆய்வாளர்: நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாகபாண்டி: (பார்வர்டு பிளாக்): வார்டில் மழை காலங்களில் சாக்கடை தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
பாதாளச்சாக்கடை இணைப்பு இல்லாதவர்களுக்கு இணைப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி கூட்டத்தை மாதம் ஒருமுறை நடத்துங்கள்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடத்தினால் வார்டுகளில் பிரச்னைகளை தெரிவிக்க முடியவில்லை.
தினமலர் செய்தி எதிரொலி
13 வது வார்டு செயின்ட் சேவியர் தெருவில் பயன்பாடற்ற பழைய குடிநீர் மேல்நிலை தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது என படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக பட்டுக்கோட்டை பல்கலை பொறியியல் கல்லூரி மாணவர்கள் கட்டடத்தின் உறுதித்தன்மை ஆய்வு அறிக்கை பெறப்பட்டு, நகராட்சி நிர்வாகம் இடிப்பதற்கு தீர்மானம் உட்பட 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.-