/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியகுளத்தில் கூடைப்பந்து போட்டி நாளை துவங்குகிறது
/
பெரியகுளத்தில் கூடைப்பந்து போட்டி நாளை துவங்குகிறது
பெரியகுளத்தில் கூடைப்பந்து போட்டி நாளை துவங்குகிறது
பெரியகுளத்தில் கூடைப்பந்து போட்டி நாளை துவங்குகிறது
ADDED : மே 14, 2025 12:31 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி நாளை துவங்குகிறது.
பெரியகுளத்தில் நாளை (மே 15 முதல் 21 வரை) பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழற் கோப்பைக்கான 64ம் ஆண்டு அகில இந்திய கூடைப்பந்து போட்டி பி.எஸ்.டி., மைதானத்தில் துவங்குகிறது.
இதில் புதுடில்லி இந்தியதரைப்படை, இந்திய விமானப்படை, லோனாவாலா இந்திய கப்பல் படை, சென்னை வருமான வரித்துறை,தெற்கு ரயில்வே, தமிழ்நாடு போலீஸ் அணி, இந்தியன் வங்கி, திருவனந்தபுரம் போலீஸ் அணி, பெங்களூரு யங் ஓரியன்ஸ் விளையாட்டு கழகம், மதுரை ரேஸ் கோர்ஸ் கூடைப்பந்து அணி, பெரியகுளம் சில்வர் ஜூபிலி அணி உட்பட 22 அணிகள் விளையாடுகின்றன.
போட்டிகள் காலை, மாலை நாக்அவுட் மற்றும் லீக் சுற்று போட்டிகளாக நடக்கிறது.
முதல் பரிசு பி.டி.சிதம்பரசூரியநாராயணன் நினைவு சுழற்கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசு வடுகபட்டி அழகு சங்கரலிங்கம் நினைவு சுழற் கோப்பை ரூ.40 ஆயிரம் உட்பட பல பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
ஏற்பாடுகளை சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் சிதம்பரசூரியவேலு மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.