/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உணவிற்காக நீர் நிலைகளை தேடி வந்த வவ்வால்கள்
/
உணவிற்காக நீர் நிலைகளை தேடி வந்த வவ்வால்கள்
ADDED : பிப் 13, 2025 05:46 AM

போடி: வனப்பகுதியில் பழவகை மரங்கள் அழிந்து வருவதால் புழு, பூச்சிகளை உண்பதற்காக போடி கண்மாய் பகுதிகளுக்கு வவ்வால்கள் வரத்துவங்கி உள்ளன.
வனப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் தீ விவிபத்துக்களால் விலை உயர்ந்த, மூலிகை, பழ மரங்கள் அழிந்து வருகிறது. இதனால் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த வவ்வால்களுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டு உள்ளது.
போடி பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் போடி அதனை சுற்றி உள்ள கண்மாயில் நீர் தேங்கி உள்ளன. புழு, பூச்சி, பழங்கள் கிடைக்காத நிலையில் வவ்வால்கள் தற்போது போடி அருகே உள்ள பங்காருசாமி கண்மாய் பகுதிகளில் உணவினை தேடி வரத் துவங்கி உள்ளன. இங்கு புழு, பூச்சிகளையும் அருகே உள்ள மரங்களில் பழங்களையும் உண்பதற்காக ஆயிரக்கணக்கான வவ்வால்கள் கூடியுள்ளன. இதனை காணவும், அதன் ஒலியை கேட்க பொதுமக்கள் வந்து ரசித்து செல்கின்றனர்.

