ADDED : பிப் 05, 2025 07:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பேட்டரி வாகனம் பயன்பாட்டிற்கு வந்தன.
கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் இருந்து அலுவலகம் வரை முதியவர்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பேட்டரி வாகனத்தை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் அபிதாஹனீப், கலெக்டர் நேர்முக உதவியாளர் முத்துமாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதிகாரிகள் கூறுகையில் ரூ.2லட்சம் மதிப்பிலான இந்த பேட்டரி வாகனம் தினசரி இயக்கப்படும் என்றனர்.அதே நேரம் திங்கட்கிழமைகளில் மனுக்கள் பதிவு செய்யும் இடம் வரையும், மற்ற நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வரை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.