/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனீ வளர்ப்போர் தொழில் முனைவோர் சந்திப்பு விழா
/
தேனீ வளர்ப்போர் தொழில் முனைவோர் சந்திப்பு விழா
ADDED : ஜூலை 24, 2025 06:36 AM
சின்னமனூர் : மாநில அளவில தேனீ வளர்ப்பு பயனாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி வேளாண் அறிவியல் மையத்தில் நடந்தது. காமாட்சிபுரம் வேளாண் அறிவியல் மையம், மதுரை மண்டல கதர் கிராம தொழில்கள் ஆணையம் இணைந்து நடத்தியது. கிராம தொழில்கள் ஆணையத்தின் உதவி இயக்குநர் கலீப்பூர் ரகுமான் தலைமை வகித்தார். வேளாண் அறிவியல் மைய இணை இயக்குனர் சிவராம் முன்னிலை வகித்தார். கதர்கிராம தொழில்கள் ஆணைய மதுரை மண்டல இயக்குனர் செந்தில்குமார் ராமசாமி சிறப்புரையாற்றினார்.
நபார்டு வங்கியின் மாவட்ட மேலாளர் ராபின்சன் ராஜா , கதர் ஆணைய உதவி இயக்குனர் செந்தில்குமார் தேனீ வளர்க்க அரசின் திட்டங்கள், மானியங்கள் பற்றியும், பயிற்சியாளர்கள் ராஜு, மீனாட்சிசுந்தரம் தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்களை விளக்கினார்கள். தேன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புகூட்டுதல் தொழில் நுட்பத்தை தொழில்நுட்பர் ( மனையியல் துறை ) சிவ செல்வி விளக்கினார்.
தேனீ வளர்ப்பாளர்கள், தொழில் முனைவோர் பங்கேற்றனர். மதுரை மீனாட்சி கல்லூரி பேராசிரியைகள் சாரதா, கவிதா ஆகியோர் தங்கள் கல்லூரியின் மாணவிகளுடன் பங்கேற்றனர். வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் நன்றி கூறினார்.