/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
/
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மே 02, 2025 07:01 AM
தேனி: சமூக நலத்துறையின் கீழ் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த பயனாளிகளுக்கு முதிர்வுத்தொகை வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் தகுதியான பயனாளிகள் பட்டியில் சென்னை சமூகநல ஆணையரகம், தமிழ்நாடு மின்விசை நிதி, மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.
விண்ணப்பித்த போது இருந்த முகவரியில் பயனாளிகள் பலர் தற்போது வேறு முகவரிக்கு மாறிவிட்டனர். மாவட்டத்தில் முதிர்வுத்தொகை பெற தகுதியான 589 பயனாளிகள் பட்டியல்https://theni.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. முதிர்வு தொகை பெற பெண் குழந்தைகளின் 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, திட்ட ரசீது, பிறப்பு சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் ஆகியவற்றின் நகல், புகைப்படம் உள்ளிட்டவற்றை சம்பந்தபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமர்ப்பித்து பயனடையலாம் எனகலெக்டர் ரஞ்ஜீத்சிங்தெரிவித்துள்ளார்.