/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மகசூல், விலை குறைவால் வெற்றிலை விவசாயிகள் புலம்பல்
/
மகசூல், விலை குறைவால் வெற்றிலை விவசாயிகள் புலம்பல்
மகசூல், விலை குறைவால் வெற்றிலை விவசாயிகள் புலம்பல்
மகசூல், விலை குறைவால் வெற்றிலை விவசாயிகள் புலம்பல்
ADDED : டிச 20, 2025 06:05 AM
சின்னமனுார்: மழை, பனி காரணமாக வெற்றிலை மகசூல், விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாக புலம்புகின்றனர்.
மாவட்டத்தில் சின்னமனூர், சீலையம்பட்டி, மார்க்கையன்கோட்டை, பெரியகுளம், வடுகபட்டி, ஜெயமங்கலம், சில்வார்பட்டி பகுதிகளில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. -வெள்ளை வெற்றிலை கிலோ ரூ.300ல் இருந்து ரூ.280 ஆக குறைந்துள்ளது. கருப்பு வெற்றிலை கிலோ ரூ.220 ல் இருந்து 200 ஆக குறைந்துள்ளது.
இந்த விலை குறைவிற்கு காரணம் குறித்து முன்னோடி வெற்றிலை விவசாயி ரவி கூறியதாவது: பனி காரணமாக கடைகள், வணிக நிறுவனங்களை இரவில் முன்கூட்டியே அடைக்கின்றனர். காலையில் கடை திறப்பதும் தாமதமாகிறது. திருவிழாக்கள், திருமணங்கள் இல்லை என்பதால் வெற்றிலை நுகர்வும் குறைந்துள்ளது. தொடர் மழை மற்றும் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மகசூல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 50 கிலோ வர வேண்டிய கொடிக்காலில் 25 கிலோ வரத்து உள்ளது. இதனால் வரத்தும் குறைந்து, விலையும் குறைந்துள்ளது. திருச்சி மார்க்கெட்டுகளுக்கு வெற்றிலை அனுப்புவது குறைந்துள்ளது. காலை 7:00 மணிக்கு துவங்கும் கொடிக்கால் வேலைகள் பனிப்பொழிவால் காலை 9:00 மணிக்கு பின்னரே தொழிலாளிகள் வேலையை துவங்குகின்றனர். மாலை 5:00 மணிக்கு வேலை முடிப்பதை முன்கூட்டியே மாலை 4:00 மணிக்கே வேலையை முடித்து வெளியேறுகின்றனர்.
தொழிலாளர்கள் பற்றாக்குறையால் ஒன்றும் பேச முடியாத நிலை உள்ளது.
மொத்தத்தில் மகசூல் இழப்பு, விலை குறைவு, தொழிலாளர் பற்றாக்குறை, வேலை நேரம் குறைவு என பல முனைத் தாக்குதல்களால் விவசாயிகள் கடும் மன உளைச்சலில் உள்ளனர் என்றார்.

