/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் பகவதி சேவை : பக்தர்கள் ஆர்வம்
/
மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் பகவதி சேவை : பக்தர்கள் ஆர்வம்
மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் பகவதி சேவை : பக்தர்கள் ஆர்வம்
மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் பகவதி சேவை : பக்தர்கள் ஆர்வம்
ADDED : டிச 10, 2025 06:53 AM

சபரிமலை: வேண்டுதல்கள் நிறைவேற சபரிமலை மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் தினமும் நடைபெறும் பகவதி சேவை பூஜையில் பக்தர்கள் அதிகம் பங்கேற்கின்றனர்.
சபரிமலை நடை திறந்திருக்கும் எல்லா நாட்களிலும் மாலை தீபாராதனைக்கு பின்னர் மாளிகைபுறத்தம்மன் கோயிலில் நடைபெறும் முக்கிய பூஜை பகவதி சேவை ஆகும்.துர்கா தேவிக்கு சமர்ப்பிக்கும் பூஜையாக இது கருதப்படுகிறது. கோயிலின் வலது புறம் உள்ள பகவதி மண்டபத்தில் நடக்கும்.
இதுமட்டுமல்லாமல் உஷ பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை, மஞ்சள் சமர்ப்பணம், பட்டு சமர்ப்பணம் போன்ற பூஜைகளும் இங்கு நடக்கிறது. இதற்கான ரசீதுகள் மாளிகைப்புறத்தம்மன் கோயில் அருகில் உள்ள தேவசம் கவுன்டர்களில் கிடைக்கும்.
சபரிமலை வரும் பக்தர்கள் கோயிலின் ஐதீகங்களை கடைபிடிக்க வேண்டும்.
ஆங்காங்கே மஞ்சள், விபூதி போன்றவற்றை வீசி எறிவது கூடாது.
சுற்றுப்புறங்களை துாய்மையாக பராமரிக்க உதவ வேண்டுமென்று மாளிகைப்புறம் மேல்சாந்தி மனு நம்பூதிரி கேட்டுக் கொண்டுள்ளார்.