/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பகவதியம்மன் கோயில் திருவிழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
/
பகவதியம்மன் கோயில் திருவிழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
பகவதியம்மன் கோயில் திருவிழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
பகவதியம்மன் கோயில் திருவிழா இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
ADDED : நவ 07, 2024 02:20 AM

கம்பம்: கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழா காமுகுல ஒக்கலிகர் சமுதாயம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் காலை மஞ்சள் நீராட்டத்துடன் துவங்கியது. இரவு அம்மன் அழைப்பு நடந்தது. இதனை தொடர்ந்து திரளாக பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்தி கடன்களை செலுத்தினார்கள். நேற்று காலை கம்ப மெட்டு ரோட்டில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். பெரிய மாடு, நடுமாடு, கரிச்சான், தேன்சிட்டு, பூஞ்சிட்டு என பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 70 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் பங்கேற்றன.
மாலையில் பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடத்தி முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். நூற்றுக்கணக்கான வண்டிகளில் பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் பங்கேற்ற வண்டி வேஷம் நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு அம்மன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் பங்கேற்றனர்.