ADDED : ஜன 28, 2025 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனியில் உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதி உலா நிகழ்ச்சி நடந்தது. இதில் பாரதி பற்றி கவியரங்கம், 'பாரதி நினைத்தது பாரதத்தில்' என்ற தலைப்பில் கருத்தரங்கம், பேச்சரங்கம் நடந்தது. அமைப்பின் மாவட்ட தலைவர் மாரிப்பன் தலைமை வகித்தார்.
சினிமா இயக்குநர் யார்கண்ணன் முன்னிலை வகித்தார். அமைப்பு இணைச்செயலாளர் நீலபாண்டியன், நீதிராஜன், சீனிவாசன், எழுத்தாளர் பொன்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கருத்தரங்கம், கவியரங்கில் கல்லுாரி பேராசிரியர்கள், கவிஞர்கள், கல்லுாரி மாணவர்கள் பேசினர். அமைப்பு பொதுச்செயலாளர் உதயம்ராம் நன்றி கூறினார்.

