/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.2.40 கோடியில் சார் பதிவாளர் அலுவலகம் கட்ட பூமி பூஜை
/
ரூ.2.40 கோடியில் சார் பதிவாளர் அலுவலகம் கட்ட பூமி பூஜை
ரூ.2.40 கோடியில் சார் பதிவாளர் அலுவலகம் கட்ட பூமி பூஜை
ரூ.2.40 கோடியில் சார் பதிவாளர் அலுவலகம் கட்ட பூமி பூஜை
ADDED : ஜூன் 28, 2025 12:45 AM
போடி: போடி சார்பதிவாளர் அலுவலக கட்டடம் 128 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. கட்டடம், சுகாதார வளாகம் சேதமடைந்து உள்ளன. இதனால் ஆவணங்கள் பாதுகாக்க முடியாமலும், பத்திரம் பதிய வரும் பொது மக்களும் சிரமம் அடைந்து வந்தனர்.
கட்டடத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து பழைய கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட பொதுப்பணித்துறை மூலம் ரூ.2.40 கோடி செலவில் 5330 சதுர அடியில் சார்பதிவாளர் அலுவலகம், கணினி, ஆவண காப்பு, உணவருந்தும் அறை, சுகாதார வளாகம், மேல் தளம் கட்டுவதற்கான பூமி பூஜையை தங்க தமிழ்ச் செல்வன் எம்.பி., துவக்கி வைத்தார்.
மாவட்ட பதிவாளர் சசிகலா, போடி சார்பதிவாளர் ஜெயப்பிரகாஷ், போடி நகராட்சி தலைவர் ராஜ ராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.