ADDED : மார் 06, 2024 04:37 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சி எம்.சுப்புலாபுரத்தில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் ரூ.7 லட்சம் ஒதுக்கபட்டது.
கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தலைமை வகித்தார்.
துணைத்தலைவர் வரதராஜன், பி.டி.ஓ.,க்கள் ஐயப்பன், திருப்பதிவாசகன் முன்னிலை வகித்தனர்.
தெப்பம்பட்டி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்ட தமிழக அரசு மூலம் ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமானப்பணிக்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சிகளில் தலைமை ஆசிரியை சீதாலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுமதி, பவானி, ஊராட்சி தலைவர் செல்லமணி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர்கள் செல்வம், வெங்கட்ராமானுஜம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒன்றியக்குழு தலைவர் அறிவுறுத்தினார்.

