/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வறண்டு வரும் நீர்நிலைகளால் வயலில் இரை தேடும் பறவைகள்
/
வறண்டு வரும் நீர்நிலைகளால் வயலில் இரை தேடும் பறவைகள்
வறண்டு வரும் நீர்நிலைகளால் வயலில் இரை தேடும் பறவைகள்
வறண்டு வரும் நீர்நிலைகளால் வயலில் இரை தேடும் பறவைகள்
ADDED : மார் 04, 2024 06:11 AM

ஆண்டிபட்டி: கோடை துவங்கிய நிலையில் குளங்கள், கண்மாய்கள், சிறு நீர்த்தேக்கங்கள் வற்றி வறண்டு வருவதால் ஆண்டிபட்டி அருகே கொக்கு, நாரை போன்ற பறவைகள் வயல்வெளிகளில் புழு பூச்சிகளை உண்பதற்காக சுற்றித் திரிகின்றன. ஆண்டிபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல கிராமங்கள் விவசாயத்தை சார்ந்துள்ளன. புள்ளிமான்கோம்பை, புதூர், குண்டலப்பட்டி, தர்மத்துப்பட்டி, மூனாண்டிபட்டி, அணைக்கரைப்பட்டி, குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, ஸ்ரீரங்கபுரம், அய்யணத்தேவன்பட்டி, வேகவதி ஆசிரமம் ஆகிய கிராமங்கள் வைகை ஆற்றின் கரைப்பகுதியில் உள்ளன.
கடந்த சில மாதங்களில் வைகை ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் விவசாய கிணறுகள், 'போர்வெல்'களில் நீர்மட்டும் நிறைந்துள்ளன. இதனால் கோடையிலும் இப்பகுதியில் பாதிப்பு இல்லாத விவசாயம் தொடர்கிறது. ஆண்டிபட்டி பகுதியில் ஆங்காங்குள்ள சிறு குளங்கள் கண்மாய்கள் நீர்த்தேக்கங்கள் வற்றி வருகின்றன.
இதனால் நூற்றுக்கணக்கான நாரை, கொக்குகள் வயல்வெளிகளில் உழவு, தொழி அடிக்கும் நேரத்தில் வெளியேறும் புழு, பூச்சிகளை உண்பதற்காக சுற்றித் திரிகின்றன.
ஏற்கனவே இப்பகுதியில் மயில்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. புள்ளிமான்கோம்பை, சாஸ்தா கோயில் மலைப்பகுதியில் இருந்து காலை, மாலை நேரங்களில் விவசாய நிலங்களில் மயில்கள் இரைக்காக வந்து செல்வது அதிகரித்துள்ளது.

