ADDED : நவ 09, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் விழாகொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் ஐயப்பன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட முன்னாள் அமைப்பாளர் ஆதிலிங்க பாண்டியன், ஒன்றிய செயலாளர் திருப்பதி முன்னிலை வகித்தனர்.
வடுகபட்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலை,இனிப்பு வழங்கப் பட்டது.
தேனி கிளை செயலாளர் சிங்கராஜ், உறுப்பினர்கள் ரமேஷ், கார்த்திக் ராஜா, லட்சுமி, கண்மணி, தனலட்சுமி பங்கேற்றனர். முன்னதாக மக்கள் நீதி மய்யம் மற்றும் தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை,கருத்தரித்தல் மையம் இணைந்து ரத்ததானம் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தினர். ஏராளமானோர் பங்கேற்றனர்.

