/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாநில வாலிபால் போட்டிக்கு கள்ளர் பள்ளி மாணவிகள் தகுதி
/
மாநில வாலிபால் போட்டிக்கு கள்ளர் பள்ளி மாணவிகள் தகுதி
மாநில வாலிபால் போட்டிக்கு கள்ளர் பள்ளி மாணவிகள் தகுதி
மாநில வாலிபால் போட்டிக்கு கள்ளர் பள்ளி மாணவிகள் தகுதி
ADDED : நவ 09, 2025 06:22 AM

சின்னமனூர்: அரசு பள்ளிகளுக்கிடையே மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தேனி மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையான வாலிபால் போட்டி தேனியில் நடைபெற்றது. குறுவட்டத்தில் வெற்றி பெற்ற பள்ளிகள் மாவட்ட போட்டியில் பங்கேற்றன. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவிகள் விளையாடினர்,
தேனியில் நடந்த மாவட்ட போட்டியில் எட்டு அணிகள் மோதியது. இறுதி போட்டியில் வெள்ளையம்மாள்புரம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி அணியும், பெரியகுளம் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி அணியும் மோதியது.
இதில் 25:17, 25:11 என்ற நேர் செட் கணக்கில் வெள்ளையம்மாள்புரம் கள்ளர் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றது.
மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகளை கள்ளர் பள்ளிகளின் இணை இயக்குநர் சுபாஷினி, முதன்மை கல்வி அலுவலர் நாகேந்திரன், தலைமையாசிரியை உத்தண்ட லட்சுமி ஆகியோர் பாராட்டினர்.
பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் முருகன் கவுரவிக்கப்பட்டார்.

