/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பசுக்கள், எருமைகளுக்கு குண்டு காய்ச்சல் பாதிப்பு; அச்சமடைய வேண்டாம் என டாக்டர் தகவல்

ADDED : நவ 09, 2025 06:23 AM
கம்பம்: பனி காலத்தில் பசுக்கள், எருமைகளை தாக்கும் குண்டு காய்ச்சல் பாதிப்பு ஒரு சில கால்நடைகளுக்கு தெரிய துவங்கி உள்ளது. காய்ச்சல் பாதிப்பு 3 நாட்களுக்குள் சரியாகி விடும் பயப்பட வேண்டாம் என கால்நடை டாக்டர் தெரிவித்துள்ளார்.
கால்நடைகளுக்கு சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கு ஏற்ப தொற்று நோய்கள் பரவும். தற்போது மழை காலம் முடிந்து, பனி காலம் ஆரம்பமாவதால் கிராமப் பகுதிகளில் சில பசுக்களுக்கு காய்ச்சல் காணப்படுகிறது.
இது தொடர்பாக கம்பம் கால்நடை மருந்தக டாக்டர் செல்வம் கூறுகையில், இந்த வகை காய்ச்சள் கொசு மற்றும் ஒரு வித பூச்சி கடியால் ஏற்படுகிறது. 'போவின் எபிமெரல்' காய்ச்சல் என்று கூறுவார்கள். 3 நாட்களில் அதுவாகவே சரியாகி விடும். எனவே தான் இதனை 3 நாள் காய்ச்சல் என அழைக்கின்றனர். இந்த வகை காய்ச்சல் பனி காலத்தில் மட்டும் வரும். கர்நாடகாவில் முதன் முதலில் கண்டுபிடித்தனர். கால்களில் குழம்புகளில் முன்னும் பின்னும் குண்டு போன்று ஏற்படும். எனவே இதை குண்டு காய்ச்சல் என்றும் அழைக்கின்றனர்.
மனிதர்களுக்கு ஏற்படும் வைரஸ் காய்ச்சல் போன்றதாகும். தீவனம் உண்ணாது. தண்ணீர் சரியாக குடிக்காது. பால் உற்பத்தி சற்று குறையும். ஆனால் 3 நாட்களில் அதுவே சரியாகி விடும். படப்படத் தேவையில்லை. பெரிய அளவில் சிகிச்சைகள் தேவைப் படாது, என்றார்.