/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
செம்மை நெல் சாகுபடி போட்டி: ரூ.5 லட்சம் பரிசு விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : நவ 09, 2025 06:25 AM
தேனி: மாநில அளவிலான செம்மை நெல்சாகுபடி உற்பத்தி திறன் போட்டியில் பங்கேற்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேளாண் இணை இயக்குநர் சாந்தமணி தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: மாநில அளவில் செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி விருது, பரிசுத்தொகை ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.
பங்கேற்க விரும்பும் விவசாயிகள் குறைந்தது 2 ஏக்கர் பரப்பளவில் செம்மை நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக செம்மை நெல் சாகுபடியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
நில உரிமை யாளர், குத்தகைதாரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்கள் மட்டும் சாகுபடி செய்திருக்க வேண்டும்.
மற்ற விருதுகளுக்கு பதிவு செய்தவர்கள் இதில் பங்கேற்க இயலாது. போட்டி கட்டணமாக ரூ.150 செலுத்தி 2026 மார்ச் 31 க்குள் பதிவு செய்ய வேண்டும். அறுவடை தேதியை 15 நாட்களுக்கு முன் தெரிவிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல் இணைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களை தொடர்பு கொள்ளலாம் என்றார்.