/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பா.ஜ., நகர செயலாளர் மின்சாரம் தாக்கி பலி
/
பா.ஜ., நகர செயலாளர் மின்சாரம் தாக்கி பலி
ADDED : பிப் 10, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி; தேனி மாவட்டம் போடி தங்கமுத்தம்மன் கோயில் தெரு விக்னேஷ்வரன் 35. பா.ஜ., நகர செயலாளர். இவருக்கு ஊத்தாப்பாறை பகுதியில் சொந்தமான மாந்தோப்பு உள்ளது.
நேற்று தண்ணீர் எடுத்து விடுவதற்காக அங்கு சென்றுள்ளார். ஆனால் பைப்பில் தண்ணீர் வரவில்லை. அதனை சரி செய்வதற்காக சென்ற போது அறுந்து கிடந்த மின் ஒயர் பைப் மீது உரசி இருந்துள்ளது.
இதனை அறியாமல் பைப்பை மாட்டிய போது மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். குரங்கணி போலீசார் விசாரிக்கின்றனர்.

