/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கரூரில் பலியானவர்களுக்கு பா.ஜ.,வினர் மலர் அஞ்சலி
/
கரூரில் பலியானவர்களுக்கு பா.ஜ.,வினர் மலர் அஞ்சலி
ADDED : செப் 30, 2025 04:47 AM

ஆண்டிபட்டி: கரூரில் த.வெ.க.,தலைவர் விஜய் இரு நாட்களுக்கு முன் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் பலியாகினர். பலியானவர்களுக்கு ஆண்டிபட்டி வைகைரோடு சந்திப்பில் பா.ஜ., சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் நகர தலைவர் மனோஜ் குமார் தலைமை வகித்தார், மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி, ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பா.ஜ., மத்திய அரசு வழக்கறிஞர் குமார், வடக்கு மண்டல பார்வையாளர் ரமேஷ், முன்னாள் நிர்வாகிகள் கண்ணன், அழகர்சாமி உட்பட பலர் இறந்தவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தேனி: நகராட்சி அலுவலகம் அருகே ஹிந்து எழுச்சி முன்னணி சார்பில் கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 40 பேருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அகல்விளக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகி ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சக்திவேல், செல்வபாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.