ADDED : பிப் 22, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு பா.ஜ., சார்பில் பக்தர்கள் ராமர் கோயில் தரிசனத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
தேனியில் இருந்து 2வது கட்டமாக 287 பேர் சென்றனர். நேற்று தேனி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டனர். அவர்களை பா.ஜ., மாவட்ட தலைவர் பாண்டியன் வழியனுப்பி வைத்தார். அயோத்தி பயணப் பொறுப்பாளர்கள் வினோத்குமார், மணிகண்டன், மாவட்டச் செயலாளர் அஜித் இளங்கோ, ஐ.டி., பிரிவு தலைவர் கோபிநாத் பாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மதுரை சென்று அங்கிருந்து அயோத்தி ரயில் ஏறி புறப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.