/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் குப்பையில்லா நகரம் சான்று பெற பா.ஜ., ஆட்சேபம்
/
கம்பம் குப்பையில்லா நகரம் சான்று பெற பா.ஜ., ஆட்சேபம்
கம்பம் குப்பையில்லா நகரம் சான்று பெற பா.ஜ., ஆட்சேபம்
கம்பம் குப்பையில்லா நகரம் சான்று பெற பா.ஜ., ஆட்சேபம்
ADDED : நவ 30, 2024 06:15 AM
கம்பம்; கம்பம் நகராட்சிக்கு மத்திய அரசிடம் இருந்து குப்பையில்லா நகரம் மற்றும் திறந்தவெளி கழிப்பறை இல்லா நகரம் என்று சான்றிதழ் பெறுவதற்கு பா.ஜ. சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 'ஸ்வச் பாரத் மிஷன் 2.0.' திட்டத்தின் கீழ் குப்பையில்லா நகரம் மற்றும் திறந்த வெளியில் மலம் கழித்தல், பொதுக் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கான சான்றிதழ் பெற கம்பம் நகராட்சி சார்பில் சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதில் பொது மக்களிடமிருந்து கருத்துக்கள்,ஆட்சேபனைகள் வரவேற்கப்பட்டிருந்து.
இதற்கு நகர் பா.ஜ. தலைவர் ஈஸ்வரன், தொழில்நுட்ப பிரிவு தலைவர் கோபிநாத் ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்து நகராட்சிக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
அதில், முக்கிய வீதிகளிலேயே குப்பை குவிந்துள்ளது. வீடுகளில் தினம் குப்பை வாங்குவதைதவிர்த்து வாரம் ஒரு முறை பெறுகின்றனர்.
ஆங்கூர் பாளையம் ரோட்டில் சாக்கடை கழிவு நீர் ரோட்டில் ஆறுபோல் ஒடுகிறது. பொதுக் கழிப்பறைகள் தண்ணீர் வசதி இன்றி சுத்தம் செய்வது இல்லை. நகராட்சியில் உள்ள கழிப்பறையே மோசமாக உள்ளது.
பஸ் ஸ்டாண்டில் உள்ள சிறுநீர் கழிப்பறை பராமரிக்கப்படவில்லை . அருகில் உள்ள கட்டண கழிப்பறையில் கட்டண கொள்ளை நடைபெறுகிறது. நுண் உரக் கூடங்களில் பெயரளவில் பணி நடக்கிறது.
நகராட்சி குப்பைக் கிடங்கில் மலை போல் குப்பைகள் தேங்கி உள்ளது. தேவையான அளவு தூய்மை பணியாளர்கள் இல்லை. எனவே குப்பையில்லா நகரம் என்று சான்றிதழ் பெறுவதற்கு நகர் பா.ஜ., ஆட்சேபனையை தெரிவிக்கின்றோம்' என கூறியுள்ளனர்.

